மோடியை சந்தித்த நாமல்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘Rising Bharat உச்சி மாநாடு 2025’ இல் கலந்துகொள்ள புதுடில்லி சென்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.
செல்வாக்கு மிக்க தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களை ஒன்றிணைக்கும் இந்த உச்சிமாநாடு, முக்கிய பிராந்திய பிரச்சினைகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகளில் கவனம் செலுத்துகிறது.
‘உரையாடல், ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட முன்னேற்றம் மூலம் இந்திய-இலங்கை உறவுகளை வலுப்படுத்துதல்’ என்ற தலைப்பில் நாமல் ராஜபக்ச இந்த மாநாட்டில் உரை நிகழ்த்தினார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.