
நாமலும் லிமினியும் புத்த கயா விஜயம் – மஹாபோதி விகாரையில் விசேட வழிபாடு
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கௌதம புத்தர் ஞானம் பெற்ற இடமான இந்தியாவின் புத்த கயாவிற்கு விஜயம் செய்து, அங்குள்ள மஹாபோதி மஹா விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, மஹாபோதி விகாரையின் செயலாளர் கலாநிதி மஹாஸ்வேத மஹாராதி உள்ளிட்ட அதன் முகாமைத்துவ குழுவைச் சேர்ந்த புத்த ரத்ன தேரர், தம்மிஸ்ஸர தேரர், கௌடின்ய தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரைச் சந்தித்து அவர் ஆசி பெற்றார்.
அத்துடன், 1891ஆம் ஆண்டு அனகாரிக தர்மபாலவினால் ஆரம்பிக்கப்பட்ட இந்திய மகா போதி சங்கத்திற்கும் நாமல் ராஜபக்ஷ விஜயம் செய்தார். அங்கு புத்த கயா மையத்தின் பொறுப்பாளர்களான கடகந்துரே ஜினானந்த தேரர், முல்தெனியவல சுசீல தேரர், ஞானரத்ன தேரர் மற்றும் வாகீச தேரர் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களது ஆசிர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி ராஜபக்ஷவும் கலந்துகொண்டார்.

