மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசுக்கு சவால் – நளின் பண்டார

“ மாகாணசபை முறைமையென்பது வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பாகும். எனவே, அத்தேர்தலை நடத்தி மக்களுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் ஜனாதிபதி செலயகத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பணியை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு அரசு முயற்சிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
மக்கள் பிரதிநிதிகளின் வேலையை அரசாங்க அதிகாரிகளுக்கு செய்ய முடியாது. எனவே, மக்கள் பிரதிநிதித்துவம் அவசியம்.
உள்ளாட்சிசபைத் தேர்தல் முடிவுகளுக்கு அஞ்சியா மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் பின்வாங்குகின்றது என்ற சந்தேகம் எழுகின்றது. முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்தக்கு சவால் விடுகின்றோம்.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கிய ஒரு வாய்ப்புதான் மாகாணசபை முறைமையாகும். எனவே, வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து சபைகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.” – எனவும் நளின் பண்டார எம்.பி. குறிப்பிட்டார்.