நாகை – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்

நாகை – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்

தமிழ்நாட்டின் நாகை -இலங்கை காங்கேசன்துறை ‘செரியா பாணி’ பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது

அதன்படி நாகை-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து இன்று 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன் மார்ச் 1-ந் திகதி முதல் கப்பல் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டின் நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் வரை இந்தியா-இலங்கை இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் திகதி ‘செரியா பாணி’ என்ற பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது.

பின்னர் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் தற்காலிமாக சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் இந்தாண்டுக்கான கப்பல் போக்குவரத்து இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் தமிழ்நாட்டில் 28ஆம் திகதி வரை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

மேலும் நாகை-இலங்கை இடையே நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு கப்பல் போக்குவரத்து தொடங்கி 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This