
மியன்மாரின் ஒரு இலட்சம் டொலர் நிதியுதவி அமைச்சரிடம் கையளிப்பு
டிட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு அனர்த்த நிவாரண நிதியாக ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை நிதியுதவியை மியன்மார் வழங்கியுள்ளது.
மியன்மார் தூதுவர் மார்லர் தான் தெய்க்கினால் இந்த நிதியுதவி வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன் இலங்கைக்கு மியன்மார் வழங்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக 500 மெட்ரிக் தொன் அரிசியை இலங்கை மக்களுக்கு மியன்மார் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES இலங்கை
