500 பில்லியன் டொலரை தொட்ட மஸ்கின் சொத்து மதிப்பு

500 பில்லியன் டொலரை தொட்ட மஸ்கின் சொத்து மதிப்பு

டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார் உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க்.

அவரது வணிக நிறுவனங்களின் சந்தை மதிப்புகள் உயர்ந்து வந்த நிலையில், அவரது சொத்து மதிப்பு அசுர வளர்ச்சி கண்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று முன்தினம் மதியம் அவரது சொத்து மதிப்பு 500 பில்லியன் டொலர்களை கடந்தது. சிறிது நேரம் கழித்து 499 பில்லியன் டொலராக சற்று இறக்கம் கண்டது.

இதனால் அவர் உலகின் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்திலும், மற்றவர்களால் விரைவில் எட்டிப்பிடிக்க முடியாத முன்னிலையிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அவரது சொத்துகளின் இந்திய மதிப்பு தற்போது 499 பில்லியன் டொலராகும். இதே வேகத்தில் அவரது சொத்து மதிப்புகள் உயர்ந்தால் அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் தனிநபரின் சொத்து மதிப்பு 1000 பில்லியனை எட்டி உலகின் முதல் டிரில்லியனராக அவர் இடம் பிடிப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Share This