ஹக்கீமுடன் இணைய தயாராகும் முஷாரப்

ஹக்கீமுடன் இணைய தயாராகும் முஷாரப்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினரோடு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் சந்தித்து பேசியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக முஷாரப்
இதன் போது தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப்பை முஸ்லிம் காங்கிரஸில் இணைப்பதன் மூலம் அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக பொத்துவில் பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் இலகுவாக கைப்பற்றிவிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் பிரதேச முக்கியஸ்தர்களுடன் அவசரமாக பேசி முஷாரப் அவர்களை கட்சிக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தலைமை பணிப்புரை வழங்கியதாகவும் அறிய முடிகிறது.

முஷாரப் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். 2024ஆம் ஆண்டு புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் அவர் போட்டியிட்டு தோல்வியுற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Share This