பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் முல்லைத்தீவு இளைஞரின் இறுதி சடங்கு

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் முல்லைத்தீவு இளைஞரின் இறுதி சடங்கு

முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியபோது தாக்குதலுக்கு முகம்கொடுத்து தப்பியோடி சடலமாக மீட்கப்பட்ட இளம்குடும்பஸ்தரின் இறுதி ஊர்வலம் இன்றையதினம் (11.08.2025) பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றிருந்தது.

முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு வாருங்கள் தகரங்கள் கழற்ற வேண்டும் என குறித்த பகுதி இளைஞர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி இலக்கத்தில் இருந்து 07.08.2025 அன்று இரவு 7.30 மணியளவில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டு ஐவர் முகாமிற்கு சென்ற நிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் நால்வர் தப்பியோடிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இறந்தவவரின் இறுதி ஊர்வலம் பொலிஸ் பாதுகாப்புடன் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு மத்தியில் இறுதி ஊர்வலம் இடம்பெற்றிருந்தது.

Share This