முஜிபுர் ரஹ்மானின் தேசத்தந்தை பட்டம் பறிப்பு

முஜிபுர் ரஹ்மானின் தேசத்தந்தை பட்டம் பறிப்பு

பங்களாதேஸ் இடைக்கால அரசு முஜிபுர் ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட தேசத்தந்தை பட்டத்தையும் யூனுஸ் அரசு பறிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

கிழக்கு பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஸின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட ஷேக் முஜிபுர் ரஹ்மான் தேசத்தந்தையாக போற்றப்படுகிறார். இவர், பதவி பறிக்கப்பட்டு நாட்டை விட்டு தப்பி ஓடி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தை ஆவார்.

தற்போது முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், பங்களாதேஸ் நாணயத்தாளில் முஜிபுர் ரஹ்மான் படத்தை நீக்கி புதிய நாணயத்தை வெளியிட்டது.

இந்நிலையில், தற்போது சுதந்திர போராட்ட வீரர்கள் சட்டத்திலும் புதிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சுதந்திரத்திற்கான போரின் போது பங்களாதேஸில் இருந்து நாடு கடத்தப்பட்ட முஜிபுர் ரஹ்மான் போன்ற அரசுடன் தொடர்புடைய நபர்கள் விடுதலை போரின் கூட்டாளிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் சுதந்திர போராட்ட வீரர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

CATEGORIES
Share This