நாடாளுமன்றில் பொய் கூறும் எம்.பிகள் – நாமல் முன்வைக்கும் புதிய யோசனை

நாடாளுமன்றில் பொய் கூறும் எம்.பிகள் – நாமல் முன்வைக்கும் புதிய யோசனை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் காப்பீடு ரத்து செய்யப்பட்டதைப் போன்று நாடாளுமன்றத்தில் பொய் சொல்வதை ரத்து செய்ய வேண்டும் என பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்களைப் பற்றி பல்வேறு பொய்களைச் சொல்கின்றனர். நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் எம்.பி.க்கள் ஒளிந்துகொண்டு பொதுமக்களை தவறாக வழிநடத்துவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்புரிமைக் குழுவிற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

ஷநாங்கள் அதை ஒரு தனிநபர் பிரேரணையாக முன்வைப்போம் அல்லது அரசாங்கம் அதனை செய்யலாம். இல்லையெனில், நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க சிறப்புரிமைக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் ஒரு சிவில் வழக்கையாவது தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். குற்றவியல் அவதூறு வழக்கு தொடர அனுமதித்தால் சிறந்தது என்றும் நாமல் ராஜபக்ச, தெரிவித்துள்ளார்.

6,891 பார்வைகள்