தேசபந்துவை பதவி நீக்கும் பிரேரணை – ஏப்ரலில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும்

இடைநீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்கான முன்மொழிவு ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.