
85,000க்கும் மேற்பட்டோர் இன்னும் தங்குமிடங்களில்!!
நவம்பர் 16 ஆம் திகதி முதல் இன்று (11) வரை நாட்டைப் பாதித்த மோசமான வானிலை காரணமாக 85,000 க்கும் மேற்பட்டோர் இன்னும் தற்காலிக தங்குமிடங்களில் வசித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இன்று (11) காலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய ஒட்டுமொத்த பேரிடர் அறிக்கையின்படி, 25 மாவட்டங்களில் 524,678 குடும்பங்களைச் சேர்ந்த 1,814,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பேரிடர் காரணமாக 639 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 193 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அதிகபட்சமாக கண்டி மாவட்டத்தில் 234 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேலும், டிட்வா சூறாவளியின் தாக்கத்தால் 5,346 வீடுகள் முழுமையாகவும், 86,245 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 26,841 குடும்பங்களைச் சேர்ந்த 85,351 பேர் இன்னும் 873 முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
