சனிக்கிழமை மாத்திரம் 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை!

சனிக்கிழமை மாத்திரம் 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை!

கடந்த சனிக்கிழமை மாத்திரம் 13 படகுகளில் 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்ததாக இங்கிலாந்தின் உள்துறை அலுவலக தரவுகள் தெரிவித்துள்ளன.

அண்மைய ஆண்டுகளில் டிசம்பர் மாதத்தில் ஒருநாளில் பதிவு செய்யப்பட்ட சாதனை இதுவாகும்.

இது ஆண்டுக்கான மொத்த புயம்பெயர்ந்தேர் எண்ணிக்கையை 41,455 ஆக உயர்த்தியுள்ளது, இது கடந்த ஆண்டை விடவும் அதிக எண்ணிக்கை ஆகும்.

2024 ஆம் ஆண்டில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்த மொத்த புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 36,816 ஆக இருந்ததாகவும் உள்துறை அலுவலக தரவுகள் வெளிக்காட்டியுள்ளன.

இதேவ‍ேளை அண்மைய ஆண்டுகளை விட 2025 ஆம் ஆண்டில் கால்வாயைக் கடந்து ஆபத்தான பயணத்தை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது.

என்ற போதிலும், ஆண்டின் மொத்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 45,755 பேர் வருகை தந்ததை விட இன்னும் அதிகமாகவில்லை என்று உள்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )