இந்தியா மேற்கொண்ட தாக்குதலில் 70 இற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழப்பு

இந்தியா மேற்கொண்ட தாக்குதலில் 70 இற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழப்பு

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட தாக்குதலில் 70 இற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் தலைமையகத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்த தாக்குதலில் தானும் கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனவும், மோடி நடத்திய தாக்குதலில் தனது குடும்பமே அழிந்துவிட்டதாகவும் மசூத் அசார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய இராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் 09 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஜெய்ஸ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகள் பயன்படுத்திய முகாம்கள் இலக்குவைத்து தாக்கப்பட்டுள்ளன.

மேலும், பாகிஸ்தான் நிலப்பரப்பில் உள்ள 04 முகாம்கள்,பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 05 முகாம்கள் தாக்கப்பட்டன.

Share This