ஐயாயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் வெளிநாடு செல்ல தயார் – சஜித் பிரேமதாச

சுமார் 5000க்கும் அதிகளவான வைத்தியர்கள் வெளிநாடுகளில் வைத்திய சேவைக்கான தகுதிகளை பூர்த்தி செய்து, வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்று (06) நாடாளுமன்றத்தில் சுகாதார அமைச்சின் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இன்று நாட்டில் வைத்தியர்கள் பணியாற்றுவதற்கான உகந்த சூழல் இல்லை எனக் கூறிய எதிர்க்கட்சி தலைவர் வைத்தியர்களை இணைத்துக்கொள்வதுடன், தக்க வைத்துக்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறினார்.