இவ்வாண்டில் இதுவரையில் 2500க்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகள் பதிவு

இவ்வாண்டில் இதுவரையில் 2500க்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகள் பதிவு

இவ்வாண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் அரிசி தொடர்பான சுமார் 700 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

அதன்படி, இவ்வாண்டில் மாத்திரம் பல்வேறு குற்றங்களுக்காக சுமார் 2500க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு நாடளாவிய ரீதியில் பல்வேறுபட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் இந்த சுற்றிவளைப்புகள் தொடர்பில் வழக்கு தொடரப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றின் போது பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், மேலும் பல சுற்றிவளைப்புகளில் 2 தொடக்கம் 3 இலட்சம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை அதிக அவதானம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Share This