24 ஆயிரத்தை தாண்டிய சுற்றிவளைப்புகள்

24 ஆயிரத்தை தாண்டிய சுற்றிவளைப்புகள்

நுகர்வோர் விவகார அதிகாரசபை மூலம் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 207 மில்லியனுக்கும் அதிகமான அபராதங்களை விதித்துள்ளது.

அதன்படி, 24,761 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு 23,953 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், பொருட்களின் விவரங்களைக் குறிப்பிடாமை, விவரங்களை மாற்றாமை, விலைகளை மறைத்தல் உள்ளிட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தை மீறி வர்த்தகர்கள் செய்த மீறல்கள் தொடர்பாக இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This