பேராதனையில் மண்சரிவு காரணமாக 23 இற்கும் மேற்பட்டோர் பலி

பேராதனையில் மண்சரிவு காரணமாக 23 இற்கும் மேற்பட்டோர் பலி

பேராதனையில் மண்சரிவு காரணமாக 23 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சரசவிகம பகுதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதுவரை 14 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் காணாமற்போனோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலும் மண்சரிவு காரணமாக இந்த பகுதியில் 10 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

CATEGORIES
Share This