200 மில்லிமீட்டருக்கும் அதிக மழை…சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்

200 மில்லிமீட்டருக்கும் அதிக மழை…சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சுமார் 200 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஒரேஞ்ச் எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, மதுரை, திருவாரூர், சிவகங்கை காஞசிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, விருதுநகர், கன்னியாகுமாரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஒரேஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 115.6 மில்லிமீட்டர் முதல் 201.4 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை

திருவண்ணாமலை, அரியலூர், திண்டுக்கல், திருப்பூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர்,கரூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 64.5 மில்லிமீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This