20 இற்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் ரத்து

ரயில்வே சாரதிகள் சிலர் பணிக்கு திரும்பாமை காரணமாக இன்று பிற்பகல் வரை 20 இற்கும் மேற்பட்ட ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
வெசாக் விடுமுறைக்குப் பின்னர் ரயில்வே சாரதிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிலர் இதுவரை பணிக்கு திரும்பவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலைக்குள் மேலும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட வேண்டியேற்படும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.