இந்திய கிரிக்கெட் அணிக்கு மிட்செல் ஸ்டார்க் புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணிக்கு மிட்செல் ஸ்டார்க் புகழாரம்

கிரிக்கெட்டில் உலகிலேயே இந்திய அணியிடம் மட்டுந்தான் மூன்று வகையிலான கிரிக்கெட்டில் மூன்று வேற வேற நாடுகளில் மூன்று அணிகளை ஆட வைக்கும் அளவிற்கு திறமை இருப்பதாக ஆஸ்திரேலியா பவுலர் மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார்.

மேலும் இதெற்கெல்லாம் ஐபிஎல் போட்டிகள் மிகவும் உதவியாக இருப்பதாக கூறியுள்ளார்.

ஒரே தினத்தில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியும், இங்கிலாந்து நாட்டில் ஒருநாள் போட்டியிலும், தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அளவிற்கு அணிகளை இந்தியா மட்டுமே வைத்திருப்பதாக தெரிவித்துள்ள அவர்,

அந்த போட்டிகளில் எல்லாம் இந்திய அணி மற்ற அணிகளுக்கு நல்ல சவாலை அளிக்கும்! ஆனால் மற்ற நாடுகளால் இதை செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் ஆடுவது எனக்கு உபயோகமானதா என்று தெரியவில்லை! நாங்கள் பல நாடுகளில் நடைபெறும் 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை பெறுகிறோம்! ஆனால் இந்திய அணி வீரர்கள் ஐபிஎல் போட்டியில் மட்டும் தான் விளையாடுகிறார்கள்.

ஐபிஎல் போட்டி உலகின் நம்பர் 1 லீக் போட்டி. அதில் அனைத்து இந்திய கிரிக்கெட் வீரர்களும் மற்ற சர்வதேச திறமையினை கொண்ட வீரர்களும் ஒன்றிணைந்து விளையாடுகிறார்கள்! எனவே தான் இந்த தொடர் பெரிய தொடராக இருக்கிறது.

உங்களிடம் சிறந்த திறமை இருந்தால் மட்டுமே ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியும் என்று மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்!

Share This