திருத்தந்தையின் இறுதி நிகழவில் பங்கேற்கும் அமைச்சர் விஜித ஹேரத்

திருத்தந்தையின் இறுதி நிகழவில் பங்கேற்கும் அமைச்சர் விஜித ஹேரத்

திருத்தந்தை புனிதர் பிரான்ஸிஸின் இறுதி நிகழ்வில் இலங்கை சார்பில் அமைச்சர் விஜித ஹேரத் கலந்துகொள்வார் என வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை 2025 ஏப்ரல் 26 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 10:00 மணிக்கு (உள்ளூர் நேரம்) புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் (St. Peter’s Square) நடைபெறவுள்ளது.

உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தை கடந்த 21ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

88 வயதான புனிதர் பிரான்சிஸ், வத்திக்கானில் உள்ள காசா செண்டா மார்த்தாவில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்திருந்திருந்தார்.

சுவாசக் கோளாறு காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திருத்தந்தை, அதன் பின்னர் குணமடைந்து இல்லம் திரும்பியிருந்த நிலையிலேயே உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This