வெளிவிவகார அமைச்சர் – மலேசியா விஜயம்

வெளிவிவகார அமைச்சர் – மலேசியா விஜயம்

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை (10) மலேசியா செல்லவுள்ளார்.

மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் உள்ளிட்ட அந்நாட்டு அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்கவுள்ளார்.

மேலும், அமைச்சர் விஜித ஹேரத் இந்த விஜயத்தின் போது ஆசிய அமைச்சர்கள் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார். இதன் போது அவுஸ்திரேலிய, ரஷ்ய மற்றும் பாக்கிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடனான சந்திப்பிலும் அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளவுள்ளார்.

தென் கொரிய முதல் துணை அமைச்சருடனும், பிலிப்பைன்ஸ் வெளிவிவகார அமைச்சருடனும் சந்திப்பில் ஈடுபடவுள்ளார். இதன் போது இலங்கைக்கும் குறித்த நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This