பதுளை புகையிரத நிலையத்திற்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்காணிப்பு விஜயம்

பதுளை புகையிரத நிலையத்திற்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்காணிப்பு விஜயம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் (18) பதுளை புகையிரத நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

அதன்போது, ரயில் நிலையத்தில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள், ஊழியர்களின் பிரச்சினைகள், ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நவீனமயமாக்கல் பணிகள் குறித்து அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.

பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க, மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட புகையிரத திணைக்கள அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

CATEGORIES
TAGS
Share This