புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் செப்டம்பர் மாதம் 695.7 மில்லியன் டொலர் வருவாய்

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் செப்டம்பர் மாதம் 695.7 மில்லியன் டொலர் வருவாய்

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 555.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு செப்டம்பரில், கடந்த ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடும்போது 140.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாக வருவாயாக கிடைத்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இன்றுவரை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு 5,811.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயாக கிடைத்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 967.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, செப்டம்பர் மாதத்தில் சுற்றுலா வருவாய் மூலம் 182.9 மில்லியன் டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This