புலம்பெயர்ந்த பாலியல் குற்றவாளி பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்

புலம்பெயர்ந்த பாலியல் குற்றவாளி பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்

 

சிறையில் இருந்து தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட புலம்பெயர் பாலியல் குற்றவாளி ஒருவரை பிரித்தானியா நாடு கடத்தியுள்ளது.

இதனை உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், நாடு கடத்தப்பட்ட நபர் இன்று காலை எத்தியோப்பியாவை சென்றடைந்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எப்பிங்கில் புகலிட விடுதியில் வசித்து வந்தபோது 14 வயது சிறுமி ஒருவரையும், பெண் ஒருவரையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹதுஷ் கெபாடு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

எனினும், கடந்த வாரம் சிறை ஊழியர்களால் ஹதுஷ் கெபாடு தவறுதலாக விடுவிக்கப்பட்டார், எவ்வாறாயும், விரைந்து செயற்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அவரை கைது செய்து காவலில் வைத்தனர்.

இந்நிலையிலேயே அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு விமானத்தில் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட அவர் இன்று புதன்கிழமை காலை எத்தியோப்பியாவை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத், ஹதுஷ் கெபாடு நாடு கடத்தப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

“கடந்த வாரத்தில் நடந்த தவறு ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது – இந்த சம்பவத்திற்காக பொதுமக்களின் கோபத்தை தான் ஏற்றுக்கொள்கின்றேன்.

இந்நிலையில், கெபட்டுவை விரைவில் கைது செய்ய பொலிஸ் அதிகாரிகளுக்கும், விழிப்புடன் இருந்ததற்காக பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என்று உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This