பொது இடத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மெக்சிகோ ஜனாதிபதி

பொது இடத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மெக்சிகோ ஜனாதிபதி

மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஸ்கீன்-பாம் அந்நாட்டு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அவர் எதிர்நோக்கிய பாலியல் துன்புறுத்தல் குறித்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவர் கடந்த திங்கட்கிழமை (04) ஜனாதிபதி மாளிகையிலிருந்து கல்வி அமைச்சுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​சாலையில் மக்களுடன் உரையாடலில் ஈடுபட்டார்.

அந்த நேரத்தில், அவருக்குப் பின்னால் இருந்து வந்த ஒருவர், ஜனாதிபதியைத் தொட்டு முத்தமிட முயற்சிக்கும் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

சம்பந்தப்பட்ட நபரால் கூடியிருந்த மற்ற பெண்களும் துன்புறுத்தப்பட்டதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, தான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாக ஜனாதிபதி கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகளின்படி, மெக்சிகோவில் 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் சுமார் 70 வீதம் பேர் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது பாலியல் துன்புறுத்தலை அனுபவித்திருக்கிறார்கள்.

நாடு முழுவதும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை குற்றவியல் குற்றமாக மாற்ற வேண்டும் என்று மெக்சிகன் ஜனாதிபதி கூறுகிறார்.

நாட்டின் முதல் குடிமகனே இப்படி பொது இடங்களில் துன்புறுத்தப்படுகிறார் என்றால், நாட்டில் உள்ள மற்ற பெண்களின் பாதுகாப்பு மிகவும் வருத்தகரமான நிலையில் உள்ளது என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டுகிறார்.

 

Share This