2032 இல் பூமியைத் தாக்க தயாராகும் விண்கல் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

2032 இல் பூமியைத் தாக்க தயாராகும் விண்கல் – விஞ்ஞானிகள் எச்சரிக்கை

விண்வெளி தொடர்பான ஆய்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன்படி 54 மீட்டர் விட்டம் கொண்ட பெரிய அளவிலான விண்கல் ஒன்று பூமியைத் தாக்கக்கூடும் என நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த விண்கல் பூமியைத் தாக்கும்பட்சத்தில் அது மிகப்பெரிய சேதத்தை விளைவிக்கும் எனவும் தெரவித்துள்ளனர்.

2032ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் திகதி இந்த விண்கல் பூமியைத் தாக்கும் என ஆய்வு நிறுவனம் கணித்து வருகிறது.

அவ்வாறு இந்த விண்கல் பூமியைத் தாக்கும்பட்சத்தில் அதனால் ஏற்படக்கூடிய சேதத்தை குறைக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

Share This