பெனால்டி இல்லாமல் அதிக கோல்கள் அடித்து மெஸ்ஸி உலக சாதனை

பெனால்டி இல்லாமல் அதிக கோல்கள் அடித்து மெஸ்ஸி உலக சாதனை

கால்பந்து விளையாட்டில் பெனால்டி இல்லாமல் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அர்ஜென்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார்.

இதன் மூலம் போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை மெஸ்ஸி தன்வசப்படுத்தியுள்ளார்.

மேஜர் லீக் கால்பந்து தொடரில் New York Red Bulls அணிக்கு எதிரா நேற்று இடம்பெற்ற போட்டியில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றிருந்தது.

இந்தப் போட்டியில் 60 மற்றும் 75வது நிமிடங்களில் மெஸ்ஸி கோல் அடித்திருந்தார். இதன் மூலம், லியோனல் மெஸ்ஸி, பெனால்டி இல்லாமல் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் போர்த்துகல் அணியின் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை முந்தினார்.

இந்த இரட்டை கோல்கள் மூலம் மெஸ்ஸி தனது பெனால்டி அல்லாத கோல்களின் எண்ணிக்கையை 764 ஆக உயர்த்தியதுடன், இது ரொனால்டோவை விட ஒரு கோல் அதிகமாகும்.

மேலும், ரொனால்டோவை விட 167 போட்டிகள் குறைவாக விளையாடியுள்ள மெஸ்ஸி மைல்கல்லை எட்டியுள்ளார்.

தற்போது 38 வயதாகும் புகழ்பெற்ற அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி 874 கோல்களை அடித்துள்ளார். எனினும், ரொனால்டோ 938 கோல்களை அடித்துள்ளார் என்பதும் குறிப்பித்தக்கது.

Share This