மேர்வின் சில்வாவுக்கு ஏப்ரல் 21 ஆம் திகதிவரை விளக்கமறியல்

மேர்வின் சில்வாவுக்கு ஏப்ரல் 21 ஆம் திகதிவரை விளக்கமறியல்

கிரிபத்கொடையில் உள்ள அரசுக்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களை தயாரித்து தனியார் ஒருவருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் வழக்கின் மூன்று பிரதிவாதிகளையும் ஏப்ரல் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரது மனு நிராகரிக்கப்பட்டு அவர்களை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

அரசுக்குச் சொந்தமான காணியை போலி ஆவணங்களை தயாரித்து தனியாருக்கு விற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கடந்த மார்ச் 05 ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவால் (CID) கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This