இங்கிலாந்தில் மேலும் பல தடுப்பூசி மையங்கள் இன்று திறப்பு

இங்கிலாந்தில் மேலும் பல தடுப்பூசி மையங்கள் இன்று திறப்பு

இங்கிலாந்தின் கென்ட்டில் மூளைக்காய்ச்சல் நோய்ப் பரவலுக்கான மேலும் பல தடுப்பூசி மையங்கள் இன்று திறப்புக்கப்படவுள்ளன.

மூளைக்காய்ச்சல் நோய்ப் பரவலுக்கு மத்தியில், தடுப்பூசி பெற முயன்ற 100 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் அதிகமான மக்களுக்கு சேவை வழங்க முயன்றாலும், கென்ட் பல்கலைக்கழகத்தின் கேன்டர்பரி (Canterbury) வளாகத்தில் இடவசதி பற்றாக்குறை காரணமாக நேற்று மதியம் தடுப்பூசி மையம் மூடப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்த மையம் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மதியம் 02 மணிக்குள் வரிசையில் நிற்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கென்ட் மற்றும் கேன்டர்பரி (Canterbury) வைத்தியசாலையில் உள்ள கேட் கிளினிக்கில் வார இறுதி முழுவதும் முன்பதிவின்றி வருபவர்களுக்கு சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை கென்டில் தகுதியுள்ள நபர்களுக்கு 8,500 க்கும் மேற்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் 1,600 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

மார்ச் மாதம் 05 ஆம் திகதி முதல் 15 வரை கெமிஸ்ட்ரி (Chemistry) இரவு விடுதியில் கலந்துகொண்டவர்கள், கேன்டர்பரியில் உள்ள நான்கு பாடசாலைகளின் ஆறாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting )தெரிவித்தார்.

இதேவேளை, இங்கிலாந்தில் உள்ளவர்கள் தங்கள் உள்ளூர் வைத்தியரிடம் ஆலோசனைப் பெற்று தடுப்பூசி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )