இந்த ராசி ஆண்கள் துணையிடம் அதிக அன்பு கொண்டவர்களாக இருப்பார்களாம்

ராசிகளின் அடிப்படையில் ஒவ்வொருவரது குணங்களும் வித்தியாசப்படும். அதன்படி எந்தெந்த ராசியைச் சேர்ந்த ஆண்கள் மிகவும் ரொமான்டிக்காகவும் தங்களது மனைவியிடம் அதீத அன்புடன் நடந்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள் எனப் பார்ப்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியைச் சேர்ந்த ஆண்களிடம் இயல்பாகவே காதல் உணர்வு நிரம்பியிருக்கும். இந்த ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் காதல், அழகு போன்றவற்றின் காரணியாக உள்ளார். எனவே தங்கள் காதலி அல்லது மனைவியை சந்தோஷப்படுத்த எப்போதும் ஏதாவது பரிசுகளை வழங்கிக்கொண்டே இருப்பார்கள்.
கடகம்
கடக ராசி ஆண்கள் தங்கள் துணையை கண்மணிபோல் பார்த்துக் கொள்வார்கள். தங்கள் துணை கவலையுடன் இருப்பதை இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே அவர்களை மகிழ்விக்க ஏதாவது செய்து கொண்டேயிருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த ஆண்கள் வெளித் தோற்றத்தில் கோபக்காரர்களாக இருந்தாலும் தங்கள் துணையை மிகவும் அன்பாக கவனித்துக் கொள்வார்கள். துணையின் எல்லா தேவைகளையும் நிறைவேற்றுவார்கள். துணையுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவார்கள்.