மீட்டியாகொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – நால்வர் கைது

மீட்டியாகொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – நால்வர் கைது

மீட்டியாகொட, மஹவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். .

மீட்டியாகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (16) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் இரவு முச்சக்கர வண்டியில் வந்த சிலரால் வீடொன்றில் வைத்து ஆண் ஒருவரும் அவரது மகள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

தந்தையின் வயிற்றிலும் மகளின் காலிலும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், அவர்கள் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீட்டியாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This