அநுரவின் சீன பயணத்தில் நடத்தப்பட்ட சந்திப்புகளும், எடுக்கப்பட்ட தீர்மானங்களும்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த 14ஆம் திகதிமுதல் 17ஆம் திகதிவரை சீனாவுக்கு மேற்கொண்ட நான்கு நாள் அரசுமுறை பயணத்தில் பல்வேறு உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளதுடன், இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம், வர்த்தகம், சுற்றுலாத்துறை மற்றும் கலாசார தொடர்புகளை வலுப்படுத்தவும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைக்க 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு மேற்கொள்ளும் ஒப்பந்தமொன்று இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் சீனா மேற்கொள்ளும் 3.7 பில்லியன் டொலர் முதலீடானது இலங்கை வரலாற்றில் சீனா மேற்கொள்ள உள்ள பாரிய முதலீடாகும். இதற்கு முன்பு போர்ட் சிட்டி, ஹம்பாந்தோட்டை துறைமுகம், தாமரை தடாகம் என பல முதலீடுகள் சீனாவால் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் ஒரே தடவையில் மேற்கொள்ளும் பாரிய முதலீடாக 3.7 பில்லியன் அமைய உள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீனப் பயணம் தொடர்பில் இருநாடுகளும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கை வருமாறு,
- சீன மக்கள் குடியரசுத் தலைவர் ஷீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 2025, ஜனவரி 14 முதல் 17 வரையி
ல் சீன மக்கள் குடியரசிற்கான உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். - இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி ஷீ ஜின்பி
ங்குடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டதுடன், அரச சபைப் பிரதமர் லீ சியாங் மற்றும் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுத் தலைவர் ஜாஓ லெர்ஜி ஆகியோரைச் சந்தித்தார். ஒரு சுமூகமான மற்றும் நட்பு சூழ்நிலையில், இரு தரப்பினரும் பாரம்பரிய நட்பை மேலும் வலுப்படடுத்துதல், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையே உயர்தர பெல்ட் அண்ட் ரோட் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் (ஒரே எண்ணக்கருவுடனான ஒரே பாதை), பல்துறை நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆழமான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டதுடன், அவை தொடர்பில் விரிவானதும் பொதுவானதுமான புரிதல்களை எட்டினர். - வெவ்வேறு அளவிலான பரிமாணங்களைக் கொண்ட நாடுகளான சீனாவும் இலங்கையும் 68 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளில் தொடர்ந்து ஒருவரையொருவர் மதித்து, ஒருவரையொருவர் சமமாக நடத்தி, ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்துள்ளதுடன், நட்புரீதியான தொடர்புகள் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கின்றன என்னும் பெருமையை இருதரப்பினரும் பகிர்ந்துகொள்கின்றனர். இறப்பர்-அரிசி ஒப்பந்தத்தில் பொதிந்துள்ள, சுயாதீனத்துவம்,
தன்னிறைவு நிலை, கூட்டுணர்வு மற்றும் பரஸ்பர உதவி ஆகியவற்றின் உணர்வை முன்னெடுத்துச் செல்லவும், பரஸ்பர மரியாதை, பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர ஆதரவு, இருதரப்பினதும் வெற்றிக்கான ஒத்துழைப்பு மற்றும் பொதுவான வளர்ச்சி ஆகிய கொள்கைகளைப் பின்பற்றவும், நேர்மையான பரஸ்பர உதவி மற்றும் என்றென்றும் நீடிக்கும் நட்பின் அடிப்படையில் சீன-இலங்கை மூலோபாய கூட்டுறவு கூட்டாண்மையை ஆழப்படுத்துவதில் உறுதியாக இருக்கவும், இரு நாடுகளுக்கும் மக்களுக்கும் அதிக நன்மைகளை பயக்கும் பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சீன-இலங்கை சமூகத்தை கூட்டாகக் கட்டியெழுப்பவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். - இருதரப்பு உறவுகள் தொடர்பில், இரு நாடுகளின் தலைவர்களினதும் வலுவான மூலோபாய வழிகாட்டுதலைப் பேணுவதற்கும், இரு அரசுகள், சட்டமன்ற அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான இருதரப்பு பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்துவதற்கும், அரசியலி
ல் பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும், ஒருவருக் கொருவர் ஆட்சி மற்றும் அபிவிருத்திக்கான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கும், அவற்றின்மூலம் கற்றுக்கொள்வதற்கும், சீன-இலங் கை உறவுகளை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் முயற்சிகளை மேற்கொள்வதற்கும் இரு தரப்பினரும் இணங்கினர். - இரு தரப்பினரும், தமது முக்கிய நலன்கள் மற்றும் கவனம் செலுத்தவேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பிலான பிரச்சினைகளில், தமது பரஸ்பர ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தீர்மானம் 2758 இன் அதிகாரத்தை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், சீன மக்கள் குடியரசின் அரசானது, முழு சீனாவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே சட்டப்பூர்வ அரசாங்கம் என்பதையும், தாய்வான் சீனப்பிரதேசத்தின் பிரிதத்தெடுக்க முடியாத பகுதியாகும் என்பதையும் அங்கீகரித்து, ஒரே சீனா கொள்கைக்கான தனது, வலுவான உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியது. தேசிய மீள் ஒருங்கிணைப்பை அடைவதற்கான சீன அரசின் அனைத்து முயற்சிகளையும் இலங்கை உறுதியாக ஆதரிப்பதுடன், “சுயாதீன தாய்வான்” எண்ணக்கருவின் எவ்வித நிலையும் எதிர்த்து நிற்கிறது. சீனா தொடர்பிலான எந்தவொரு எதிர் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கும் தனது பிரதேசத்தைப் பயன்படுத்த இலங்கை ஒருபோதும் அனுமதிக்காது என்றும், ஷிசாங் மற்றும் ஷின்ஜியாங் தொடர்பான பிரச்சினைகளில் சீனாவை உறுதியாக ஆதரிக்கும் என்றும் இலங்கை மீண்டும் வலியுறுத்தியது. தேசிய சுதந்திரம், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் இலங்கையை தொடர்ந்து வலுவாக ஆதரிப்பதாகவும், அதன் தேசிய நிலவரங்களுக்கு ஏற்ற வளர்ச்சிப் பாதையை சுயாதீனமான தெரிவுகளில் இலங்கைக்கு மதிபளித்து, அவற்றுக்கு ஆதரிப்பதாகவும் சீனா மீண்டும் வலியுறுத்தியது. சுதந்திரமானதும் அமைதியானதும் வெளியுறவுக் கொள்கைக்கான அதன் உறுதிப்பாட்டை சீனத் தரப்பு மீண்டும் வலியுறுத்தியது. சுயாதீனமான அணிசேரா வெளியுறவுக் கொள்கைக்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்தியது.
- 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியமைக்காக இலங்கைக்கு சீனா வாழ்த்து தெரிவித்ததோடு, இலங்கையின் புதிய அரசாங்கம், இலங்கை மக்களை பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு, ஒற்றுமை, ஸ்திரத்தன்
மை மற்றும் செழிப்பு ஆகியவற்றில் முன்னோக்கி அழைத்துச் சென்றமைக்காக தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தது மட்டுமால்லாமல் இலங்கை அரசாங்கம் நாட்டின் நிலையான அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு அயராது உழைக்கும் தருணத்தில், சீனா தனது தீவிர ஆதரவை வழங்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்தது. புதிய சகாப்தத்தில் சீனாவின் குறிப்பிடத்தக்க சாதனைகளை இலங்கை பாராட்டியதுடன், அனைத்து வகையிலும் சிறந்து விளங்குகின்ற நவீன சோசலிச நாடொன்றைக் கட்டியெழுப்பவும், சீன நவீனமயமாக்கல் பாதையின் மூலமான சீன தேசத்தின் புத்துணர்ச்சியை மேம்படுத்தவும் சீனாவுக்கான தனது ஆதரவைத் தெரிவித்தது. சீர்திருத்தங்களை விரிவுபடுத்தவும், மேலும் ஆழப்படுத்தவும், உயர்தரத்திலான வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கவும், சீனாவின் உந்துதல் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு புதிய வாய்ப்புகளைக் கொண்டுவரும் என இலங்கை நம்புகிறது. - இரு நாடுகளின் தலைவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஊக்குவித்தலின் கீழ், சீனாவும் இலங்கையும் பெல்ட் அண்ட் ரோட் ஒத்துழைப்பில் பலனுறுதிமிக்க பெறுபேறுகளை உருவாக்கியுள்ளன. இலங்கை, அதன் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியிலும், தனது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிலும் பெல்ட் அண்ட் ரோடு ஒத்துழைப்பின் முக்கிய பங்கைப் பாராட்டுகிறது. கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக ஒருங்கிணைந்த அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து முக்கிய திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கக்க்கூடிய செயற்பாட்டு நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கும், பட்டுப்பா
தைச் செயற்பாட்டுத்திட்டம் போன்ற தளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும், வாழ்வாதா ரத்திற்கான நிகழ்ச்சித் திட்டங்களுக்கமைவாக ஒன்றாகத் திட்டமிடுதல், ஒன்றாகக் கட்டியெழுப்புதல் மற்றும் ஒன்றாக பயனடைதல், திறந்ததும், பசுமையா னதும் மற்றும் அர்ப்பணிப்புமிக்கதுமான ஒத்துழைப்பு, உயர்தரத்திலான, மக்களை மையமாகக் கொண்ட மற்றும் வளங்குன்றாத நிலையான வளர்ச்சியுடன்கூடிய உயர்தர பெல்ட் அண்ட் ரோடு ஒத்துழைப்பை ஆதரிப்பதற்காக ஜனாதிபதி ஷி ஜின்பிங் அறிவித்த எட்டு முக்கிய படிகளைப் பின்பற்றுவதற்கும் இரு தரப்பினரும் இணங்கினர். சீனா-இலங்கை உயர்தர பெல்ட் அண்ட் ரோட் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், உயர் தர, வலுவான மீள்தன்மை மற்றும் அதிக நிலைத்தன்மையினூடான இருதரப்பினதும் வெற்றியை நோக்காகக் கொண்ட மேம்பாட்டிற்கான புதிய இடத்தை கூட்டாகத் திறப்பதற்கும், பெல்ட் அண்ட் ரோட் ஒத்துழைப்புத் திட்டத்தில் கைச்சாத்திடுவதில் இரு தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனர். - கடன் பிரச்சினையை திறம்பட கையாள்வதில் இலங்கைக்கு வலுவான ஆதரவாக விளங்கிய சீனா, கடன்களை மறுசீரமைப்பதில் வழங்கிய முக்கிய உதவி உட்பட, நிதிசார் நெருக்கடி மிகுந்த காலங்களில் சீனாவிடமிருந்து இலங்கை பெற்ற பெறுமதிமிக்க ஆதரவிற்கு இலங்கை தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தது. இலங்கை, சீன நிதி நிறுவனங்களுடன் இணைந்து ஒப்புக் கொள்ளப்பட்டவாறு, கடன் மறுசீரமைப்பு திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியது. சர்வதேச நாணய நிதியத்தில் சீனா தொடர்ந்து நேர்மறையான பங்கை வகிப்பதுடன், இலங்கையின் நிதிச் சிக்கல்களைத் தணிக்கவும், கடன்படு நிலையில் நீடிப்புத்திறனைப் பேணவும் உதவும் வகையில், ஏனைய கடன் வழங்குநர்களுடன் நட்புரீதியான தொடர்பைப் பேணுகிறது. இலங்கை மத்திய வங்கியும், சீன மக்கள் வங்கியும் தங்கள் நாணய மாற்று ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளதுடன், நிதிசார் ஒத்துழைப்பைத் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளன.
- பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றம் குறித்து, இரு தரப்பினரும் திருப்தி அடைந்துள்ளனர். பல்வேறு வழிகளில் இலங்கையிலிருந்தான, இறக்குமதியை ஊக்குவிப்பதற்காக சீனா மேற்கொண்டுள்ள முயற்சிக்கு இலங்கை தெரிவித்தது. தேயிலை, இரத்தினக்கல் மற்றும் பிற தொழில்களில் ஈடுபட்டுள்ள இலங்கை நிறுவனங்களுக்கு சீன இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கங்களுடன் உறவுகளை ஏற்படுத்துவதில் தொடர்ந்து ஆதரவளிக்கவும், சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி, சீன இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கண்காட்சி, சீன-தெற்காசிய கண்காட்சி மற்றும் இலத்திரனியல் வணிகத் தளங்கள் போன்றவற்றில் இலங்கை பங்கேற்பதை எளிதாக்கவும், பரஸ்பர நன்மை மற்றும் இருதராப்பினரதும் வெற்றிக்கான பெறுபேற்று அடிப்படையில் இரு நாடுகளின் நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தவும் சீனா தனது தயார்நிலையை வெளிப்படுத்தியது. சமத்துவம், பரஸ்பர நன்மை மற்றும் இருதரப்பினதும் வெற்றியை நோக்காகக்கொண்ட கொள்கைகளுக்கு இணங்க, சகலதும் அடங்கிய தொகுப்பொன்றில் விரிவான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
இலங்கை சீனாவிலிருந்து அதிக வணிக முதலீட்டை வரவேற்பதுடன், இந்நோக்கத்திற்கா
- விவசாயம் தொடர்பான பரந்த அளவிலான ஒத்துழைப்பு மற்றும் ஆழமான பரிமாற்றங்கள் குறித்த நேர்மறையான மதிப்பீடுகளை இரு தரப்பினரும் பகிர்ந்து கொண்டனர். இலங்கையின் நிலையானதும், வளங்குன்றாததுமான விவசாய வளர்ச்சிக்கான திறனை மேம்படுத்த உதவும் வகையில் வெப்பமண்டல பயிர்களுக்கான உயிரியற் தொழில்நுட்பங்கள், தாவரப் பெருக்கம் பயிர்ச்செய்கை மற்றும் மீன்வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில் இலங்கையுடன் பயிற்சி மற்றும் செயல்விளக்கத் திட்டங்களை மேற்கொள்வதற்கான தனது தயார்நிலையை சீனா தெரிவித்தது; மேலும் தேயிலை, பழங்கள், இலவங்கப்பட்டை மற்றும் நீர்வள உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட தனித்துவமான பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதை இலங்கை மேலும் விரிவுபடுத்துவதை வரவேற்றது. வறுமைக் குறைப்பு மற்றும் கிராமப்புற மறுமலர்ச்சியில் உன்னிப்பாகக் கவனம் செலுத்துவதன் மூலம் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான தயார்நிலையை இரு தரப்பினரும் பகிர்ந்து கொண்டனர். தொடர்புடைய துறைகளில் பணியாளர்களின் திறனை வலுப்படுத்த இலங்கைக்கு உதவ சீனா தனது தயார்நிலையை வெளிப்படுத்தியது.
- இரு தரப்பினரும் காலநிலை மாற்றத்தை மனித சமூகத்தின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகவும், சீனா மற்றும் இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாகவும் விளங்குகின்றது என்பதை ஏற்றுக்கொண்டனர். காலநிலை மாற்றத்தில், தொடர்ந்தும் தீவிரமாக இணைந்து பணியாற்ற இணங்கினர். கடுமையான வெள்ளப்பெருக்க்கின்போதான, சீனா
வின் மனிதாபிமான நிவாரணத்திற்காக இலங்கை நன்றி தெரிவித்தது. பேரிடர் தடுப்பு, அனர்த்தங்களுக்கெதிரான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் அவசரகால மீட்பு போன்ற துறைகளில் இலங்கையுடன் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், அதன் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இலங்கையின் அவசரகால முகாமைத்துவத் திறன்களை மேம்படுத்துவதில் பயிற்சி அளிக்கவும் சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. ஐக்கிய நாடுகளின் 2030 இற்கான நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான கூட்டு முயற்சியின், பகுதியொன்றாக, பெ ல்ட் அண்ட் ரோட் சர்வதேச வளங்குன்றாத நிலையான அபிவிருத்திக் கூட்டணி மற்றும் ஏனைய தளங்களின் தொடர்புடைய நடவடிக்கைகளில் இலங்கையின் பங்களிப்பை சீனா வரவேற்கிறது. - சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் கடல்சார் ஒத்துழைப்பைத் தொடரவும், கடல்சார் விவகாரங்களில் தொடர்ந்து இருதரப்பு ஆலோசனைகளை நடத்தவும் இரு தரப்பினரும் விரும்புகின்றனர். கடல்சார் சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாத்தல் மற்றும் மறுசீரமைத்தல், கடல்சார் கள விழிப்புணர்வு, கடல்சார் மீட்பு மற்றும் பேரிடர் நிவாரணம், கடல்சார் பணியாளர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும், பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய கடல்சார் சமூகத்தை உருவாக்க தங்கள் பலத்தை திரட்டவும் இரு தரப்பினரும் தயாராக உள்ளனர். நீல (கடல்சார்) கூட்டாண்மைக்கான கடல்சார் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இரு தரப்பினரும் இணங்கினர்.
- கல்வித்துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தரப்பினரும் தயாராக உள்ளனர். புரிதல் மற்றும் நட்பை அதிகரிப்பதற்கு கல்வித்துறையிலான பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் முழுமையாக அங்கீகரித்ததுடன், ஆசிரியர்கள்,
மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் பரிமாற்றங்களை மேலும் மேம்படுத்துவதற்கான தயார்நிலையை இருதரப்பினரும் வெளிப்படுத்தினர். மேலும் அர்ப்பணிப்புள்ள மாணவர்கள் சீனாவில் மேற்படிப்பைத் தொடர்வதனை சீனா வரவேற்று, ஊக்குவிப்பதுடன், அவர்களுக்கு அரசாங்க புலமைப்பரிசில்களுடன்கூடிய ஆதரவை அளிக்கத் தயாராக உள்ளது. லூபன் செயற்பாட்டு அமர்வினூடே சிறப்பான பலனை அளிக்கவும், இலங்கைக்கு தொழிற்பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி மூலம் அதிகபடியான தொழில்வாண்மையாளர்களை வளர்க்கவும், சீனா இலங்கையுடன் இணைந்து செயற்படும். கல்வித்துறையில் சீனாவின் உதவியை இலங்கை பாராட்டுவதுடன், சீனாவுடன் இணைந்து டிஜிட்டல் வகுப்பறை செயற்திட்டத்தின் வெற்றிக்காகச் செயற்படும். இலங்கையில் சீன மொழிக் கல்வியை ஊக்குவிக்கவும், இலங்கையில் உள்ள சீன கலாச்சார மையத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே கலாச்சார பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு தரப்பினரும் தயார்நிலையில் உள்ளனர். சீன அறிவியல் கல்வி நிறுவனத்தின் கீழுள்ள, சீன-இலங்கை கூட்டு கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இரு தரப்பினரும் தொடர்ந்து பணியாற்றுவது மட்டுமின்றி, அதனை மேம்படுத்துவதுடன், இரு நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள், ஒத்துழைப்பு மற்றும் கல்வித்துறையை வலுப்படுத்துவதில் ஈடுபாட்டுடன் செயற்படுவர். - இரு தரப்பும் தமது, நீண்டகால நட்பை முன்னெடுத்துச் செல்லவும், தங்கள் மக்களை நெருக்கமாகக் கொண்டுவரவும் தயாராக உள்ளனர். பரஸ்பர சுற்றுலா மற்றும் விமானமார்க்க தொடர்புகளை ஊக்குவிக்க இரு தரப்பினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். பட்டுப்பாதை நகரங்களின் சர்வதேச சுற்றுலா கூட்டணியில் இணைத்துள்ள இலங்கை நகரங்களை சீனா வரவேற்கிறது. சீனா மற்றும் இலங்கையில் சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இரு தரப்பினரும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பர்.
- இளைஞர்கள், சிந்தனையாளர்கள், வி
ளையாட்டு மற்றும் ஊடகங்கள் போன்ற துறைகளில் பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், புத்தமதப் பரிமாற்றங்களின் பிணைப்பைக் கட்டமைக்கவும், மக்களிடையேயும் சகோதர நகரங்களுக்கிடையிலான பரிமாற்றங்களை ஆழப்படுத்தவும் இரு தரப்பினரும் தயாராக உள்ளனர். - இலங்கையில் சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும். சீனாவின் யூனான் மாகாணம், ப்ரைட்னஸ் ஆக்ஷன் திட்டத்தை செயல்படுத்த இலங்கைக்கு மருத்துவக் குழுக்களை தொடர்ந்து அனுப்பும்.
- ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் கலாச்சார பாரம்பரியப் பாதுகாப்புக்கான ஆசிய முன்முயற்சி மற்றும் ஆசியாவில் கலாச்சார பாரம்பரியத்திற்கான கூட்டணி போன்றவற்றில் பங்கேற்பதற்கான இலங்கையின் நேர்மறையான பதிலை சீனத் தரப்பு பாராட்டுகிறது. இக்கூட்டணியின் கீழ் இலங்கையுடன் இருதரப்பு கலாச்சார பாரம்பரிய ஒத்துழைப்பை சீனா மென்மேலும் ஊக்குவிக்கும்.
- நீதித்துறை, சட்ட அமுலாக்கம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு முக்கிய அங்கம் என்பதனை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்வதுடன், தொலைத்தொடர்
பு மோசடிகள் மற்றும் இணையத்தள சூதாட்டம் போன்ற நாடுகள் கடந்த குற்றங்களை கூட்டாகக் கட்டுப்படுத்தத் தயாராக உள்ளனர். இலங்கையின் நீதித்துறை, சட்ட அமுலாக்கம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் திறன் மேம்பாட்டை ஆதரிக்கவும், காவல் துறைக்கு உதவி வழங்கவும் சீனா தன்னால் இயலுமான அனைத்தையும் செய்யத் தயாராகவுள்ளது. - ஜனாதிபதி ஷீ ஜின்பிங் முன்மொழிந்த உலகளாவிய அபிவிருத்திக்கான முயற்சி, உலகளாவிய பாதுகாப்பு முயற்சி மற்றும் உலகளாவிய நாகரிக முயற்சி ஆகிய மனிதகுலத்திற்கான பகிரப்பட்ட எதிர்காலத்தைக் கொண்ட ஒரு சமூகத்தின் வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், அவ்வளர்ச்சியி
ல் தீவிரமாக பங்கேற்பதற்கும் இலங்கை தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த காலகட்டத்தில் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையானது, 2025 ஆகிய இவ்வாண்டில், தனது 80 வது ஆண்டு நிறைவைக் குறித்து நிற்கிறது. ஐக்கிய நாடுகள் சபையை மையமாகக் கொண்ட சர்வதேச முறைமை, சர்வதேச சட்டத்தால் ஆதரிக்கப்படும் சர்வதேச ஒழுங்கு மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளுகிணங்க சர்வதேச முறைமையொன்றை நிலைநிறுத்துவதற்கான தனது இணைந்த உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர். இரு தரப்பினரும் அமைதியான சகவாழ்விற்கான ஐந்து கொள்கைகளை கடைபிடிப்பதுடன், சமமான மற்றும் சீரான பன்முக உலகம் மற்றும் உலகளாவிய அடிப்படையில் நன்மை பயக்கும் மற்றும் அனைத்தும் உள்ளடங்கலான பொருளாதார உலகமயமாக்கலை கூட்டாக ஆதரிப்பது மட்டுமின்றி, உலகின் அனைத்து நாடுகளுக்கும் அமைதி, பாதுகாப்பு, செழுமை மற்றும் முன்னேற்றத்துடனான பிரகாசமான எதிர்காலத்தை நோக்கிச் செயற்படுவர்.
- இவ்விஜயத்தின் போது, விவசாயம், சுற்றுலா, வாழ்
வாதார உதவி, ஊடகம் மற்றும் ஏனைய துறைகளில் இரு தரப்பினரும் ஒத்துழைப்பு ஆவணங்களில் கைச்சாத்திட்டனர். - ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, தனக்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காக சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன், சீனத் தலைமையை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார். சீன ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி விடுத்த அன்பான அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததைத்தொடர்ந்து, இரு தரப்பினரும் இராஜதந்திர ரீதியில் சிறப்பான தொடர்புகளைத் தொடர்ந்தும் சிறப்பாகப் பேண இணங்கினர்.