ஜனாதிபதிக்கும் மேல் மாகாண காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் மேல் மாகாண காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (18) ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இதன்போது, திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்குத் தேவையான வசதிகளை வழங்கவும், புதிய சட்டங்களைத் தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டாமல் இலங்கையில் ஒரு நேர்மையான சமூகத்தை உருவாக்க முடியாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.