இலங்கை மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பு ஆரம்பம்

இலங்கை மற்றும் சீன ஜனாதிபதிகளுக்கு இடையிலான சந்திப்பு ஆரம்பம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்று முன்பு அந்த நாட்டு நேரப்படி மாலை 5.00 மணிக்கு மக்கள் மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.

சீனாவிற்கு நான்கு நாள் அரச முறை பயணமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக் நேற்று முன்தினம் இரவு சென்றிருந்தார்.

இதன்படி, நேற்று காலை சீனா சென்ற ஜனாதிபதிக்கு இராணுவ மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான கண்காட்சியைப் ஜனாதிபதி பார்வையிட்டார்.

பின்னர், சீன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமான குங் அரண்மனை அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில், தற்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்று முன் ஆரம்பமாகியுள்ளது.

 

Share This