சபாநாயகர், சுவிஸ் தூதுவர் இடையில் சந்திப்பு

சபாநாயகர், சுவிஸ் தூதுவர் இடையில் சந்திப்பு

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னக்கும் இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் சிறி வால்டுக்கும் இடையில் சிநேகபூர்வமான சந்திப்பொன்று இடம்பெற்றது.

நாடாளுமன்றத்தில்  இடம்பெற்ற சந்திப்பில் இருநாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக  கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பாகவும், ஊழலை தடுப்பது தொடர்பாகவும், நல்லிணக்கம் மற்றும் நாடாளுமன்ற ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

தொடர்ச்சியாக இலங்கைக்கு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவினை வழங்குவதாக சுவிஸ்  தூதுவர் சபாநாயகரிடம்  உறுதியளித்தார்.

Share This