
மீனகயா கடுகதி ரயில் இன்று முதல் மீண்டும் சேவையில்
மீனகயா கடுகதி ரயில் இன்று முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வரை ரயில் சேவை இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த ரயில் இன்று காலை 07 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.
திட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மீனகயா ரயில் சேவை புனரமைப்பு பணிகளின் பின்னர் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
CATEGORIES இலங்கை
