தமிழீழ வைப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட நகைகளை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்

தமிழீழ வைப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட நகைகளை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்

தமிழீழ வைப்பகத்திலிருந்து பெறப்பட்ட நகைகளை, அவற்றின் உரிமையாளர்களிடம் விரைவில் கையளிப்பதற்குரிய பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்தார்.

” தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட நகைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தார். எனினும், அதற்குரிய நடவடிக்கை இன்னும் ஆரம்பமாகவில்லை.

வடக்கு மாகாணத்திலுள்ள பலர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவீகரனிடம் அடகுச்சீட்டுகளை கையளித்துள்ளனர். வடக்கிலுள்ள அரசாங்க அதிபரிடம் இது பற்றி கேட்டால், இன்னும் எவ்வித உத்தரவும் கிடைக்கப்பெறவில்லை என பதில் வருகின்றது.
எனவே, மக்களின் நகைகளை அவர்களிடமே மீண்டும் – வெகுவிரைவில் கையளிப்பதற்குரிய பொறிமுறையை உருவாக்க வேண்டும்.” – என கவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )