பாடசாலை வளாகங்களில் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய்களை தடுக்க நடவடிக்கை

பாடசாலை வளாகங்களில் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய்களை தடுக்க நடவடிக்கை

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாடு முழுவதும் சிக்குன்குன்யா மற்றும் டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாக கல்வி அமைச்சுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 31ஆம் திகதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பதிவான டெங்கு நோயாளர்களில் அதிக சதவீதம் 5 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களாகும் என்பதை சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This