பிரித்தானியாவில் காதல் எனும் போர்வையில் பாரிய நிகழ்நிலை மோசடி

பிரித்தானியாவில் காதல் எனும் போர்வையில் பாரிய நிகழ்நிலை மோசடி

பிரித்தானியாவில் காதல் ஆசை வார்த்தைகளை கூறி ஒன்லைனில் மேற்கொள்ளப்படும் மோசடிகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TSB இன் தரவுகளின் படி மோசடி செய்பவர்கள் பெருகிய முறையில் அதிநவீன நுட்பங்களை பயன்படுத்துவதால் பாதிக்கப்பட்டவர்கள் முன்பை விட அதிக பணத்தை இழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மோசடி செய்பவர்களுக்கு அனுப்பப்படும் பணத்தின் அளவு 37 வீதம் அதிகரித்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 15 வீதம் அதிகரித்துள்ளதாகவும் TSB இன் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 3,000 மோசடி சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் 20.5 மில்லியன் பவுண்ட்ஸை இழந்துள்ளதாக தொழில்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் வயதானவர்களை அதிகம் குறிவைப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாளானவர்கள் 55 வயதுக்கும் மேற்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )