
வெனிசுலா தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு- அமெரிக்கா தாக்குதல்?
வெனிசுலா தலைநகர் கராகசின் பல பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
குண்டுகள் வெடித்ததில் அங்கு தீ பிழம்பு ஏற்பட்டு கரும்புகை எழும்பியது. மேலும் தலைநகரின் பல இடங்களில் விமானங்கள் தாழ்வாக பறந்து சென்றுள்ளன. வெடிப்பு சத்தங்களை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர்.
தலைநகர் கராகசில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
என்றாலும், இந்த தாக்குதல் குறித்து தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் அமெரிக்காவுக்கும், வெனிசுலாவுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் வெனிசுலா மீது அமெரிக்கா ரகசிய தாக்குதல் நடத்தியிருக்கலாம் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
