ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ரஷ்யாவில் பாரிய நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் சக்கி வாய்ந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இந்த நிலஅதிர்வு இன்று புதன்கிழமை 8.0 ரிக்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பசுபிக் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலஅதிர்வு 19.3 கிலோமீற்றர் ஆழத்தில், பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கி நகரிற்கு 136 கிலோ மீற்றர் கிழக்கில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் மற்றும் ரஷ்யாவின் கடற்கரை பகுதிகளில் 1 மீற்றர் உயரம் கொண்ட சுனாமி அலைகள் எழக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாம், ரோட்டா, டினியன், சைபன் உள்ளிட்ட வடக்கு மரியானா தீவுகளிலும் சுனாமி அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 03 மணி நேரத்திற்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share This