பிலிப்பைன்ஸில் பாரிய நில நடுக்கம் – 34 பேர் பலி, மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தில் சுமார் 34 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டிட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் பலர் காயமடைந்திருக்கிலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளயிட்டுள்ளன
பிலிப்பைன்ஸ் நாட்டின் விசாயாஸ் மாகாணம், செபு நகரத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0, 7.0 என மூன்று வலுவான நில நடுக்கங்கள் பதிவாகி உள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது.
பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்து முற்றாக சேதமடைந்துள்ளன. கட்டிடங்களில் இருந்த பலர் மீட்கப்பட்டுள்ளபோதும், மேலும் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் பிலிப்பைன்ஸ் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தீயணைப்பு படையினர் உட்பட முப்படையினரும் மிட்ப்பு பணிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர். 34 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட போதும், மேலும் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இடிந்து விழுந்த பல கட்டிடங்களில் பலர் இருந்தாகவும் சில தொடர்மாடி மனைகளும் இடிந்து விழுந்துள்ளதாகவும் கூறப்படும் நிலையில், உயரிழப்புகள் மேலும் அதிகமாக இருக்கலாம் என் பிலிப்பைன்ஸ் அரச அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நில நடுக்கம் ஏற்பட்ட செபு நகரத்தில் இலட்சக்கணக்கான மக்கள் வசாழ்கின்றனர். தற்போது அங்கிருந்து அனைத்து மக்களும் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர்.
நிலநடுக்கம் மீண்டும் ஏற்படலாம் என வானிநிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.