100 வருடங்களுக்குப் பின் உருவாகும் செவ்வாய் – ராகு மாற்றம்…எந்த ராசியினருக்கு நன்மை?
கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் ராசிகள் மற்றும் நட்சத்திரங்களுக்கு ஏற்ப தங்கள் நிலையை மாற்றுகின்றன.
நாளை ஞாயிற்றுக்கிழமை ராகு இரவு 9.11 மணிக்கு இரண்டாவது வீட்டிலிருந்து உத்திரட்டாதி நட்சத்திரத்தின் முதல் வீட்டுக்குள் செல்கிறார்.
செவ்வாய் இரவு 11.52இற்கு புனர்பூச நட்சத்திரத்தில் இடம்பெயர்கிறது.
100 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் இந்த செவ்வாய் – ராகு மாற்றத்தால் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் என்று பார்ப்போம்.
ரிஷபம்
நிதி நிலை, தொழில் நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மகிழ்ச்சியாக இருப்பார்கள். இழுபறியாக இருந்து வந்த பணிகள் வெற்றியில் முடியும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிட்டும். விருப்பங்கள் நிறைவேறும்.
சிம்மம்
சமூக அந்தஸ்து அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில்ரீதியான முன்னேற்றம் கிட்டும். நல்ல வருமானம் கிடைக்கும். சொந்த வாகனம் அல்லது சொத்த வாங்குவீர்கள். திருமணமானவர்களுக்கு சிறந்த காலம்.
தனுசு
வருமானம் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாழ்க்கையின் மகிழ்ச்சியான காலகட்டமாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.