மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு விளக்கமறியல்
நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் எதிர்வரும் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேநபர் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் ஜனவரி ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்கார, நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (சிஐடி) நேற்று சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டார்.
பிபிலே பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான திசர இரோஷன நாணயக்கார, பின்லாந்தில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி தனிநபர்களிடமிருந்து சுமார் 3 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.