தோட்டத் தொழிலாளர்களை மறந்துவிட்டது அரசு – மனோ கவலை

தோட்டத் தொழிலாளர்களை மறந்துவிட்டது அரசு – மனோ கவலை
வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த 1700 ருபா சம்பள அதிகரிப்பு இதுவரை வழங்கப்படவில்லை. அதனால் தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் கைவிட்டுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற வேலையாட்களின் வரவு செலவுத்திட்ட நிவாரணப்படி திருத்த சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதன திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
” நாட்டின் பிரதான தொழிலாளர்களான தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் கைவிட்டுள்ளது. அவர்களுக்காக கவலைப்பட்டு கதைக்கின்றார்களே தவிர அவர்களின் தேவைகள் எதுவும் நிறைவேற்றுவதில்லை. வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து ஜனாதிபதி உரையாற்றுகையில் தோட்ட தொழிலானர்களுக்கு 1700 ருபா வழங்கப்படும் என தெரிவித்தார். ஆனால் அவ்வாறு எதுவும் அதிகரிக்கப்படவில்லை. ஒருசில கம்பனிகள் வழங்குவதாக தெரிவித்தாலும் அது வழங்கப்படவில்லை. நாட் சம்பளமே அவர்களுக்கு வழங்கப்படுவதால், திட்டமிட்டு அந்த மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அதனால் இதுதொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் சம்பள சபை தொடர்பில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எமது தமிழ் முற்போக்கு கூட்டணி அந்த சபையை பிரதிநிதித்தும் செய்வதில்லை. அரசாங்கம் அதில் இருக்கிது.
அதேபோன்று சி.டபிள்யூ.சீயும் அதில் இருக்கிறது. அதனால் இதன் மூலம் தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தால் அதற்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. தோட்த்தில் முறை மாற்றம் ஒன்றை மேற்கொண்டு, தாேட்டத் தொழிலாளர்களையும் பங்காளிகளாக்க வேண்டும். அந்த மக்களின் வருமான்ததை அதிகரித்துக்கொள்ள திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும். அதுதொடர்பில் கலந்துரையாட நாங்கள் தயாராக இருக்கிறோம். சம்பளம் அதிகரித்து மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற முடியாது.
மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு 2200 ருபா வழங்க வேண்டும் என்றே சம்பள நிர்ணய சபையில் தெரிவித்திருந்தது. அது கிடைக்கிறதா, இருந்த அரசாங்கங்களுக்கும் அதனையே தெரிவித்து வந்தீர்கள். அதனால் நாங்கள் தெரிவிப்பது, தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு அல்ல. அவர்களை பங்காளிகளாக்க வேண்டும். அதுவே எமது நிலைப்பாடு.அதனால் முறைமாற்றம் ஒன்றை மேற்கொள்தன் மூலமே தோட்டத்துறையை முன்னேற்ற முடியும். அவ்வாறு இல்லாமல் முதலாளிமாருடன் கலந்துரையாடி ஒருபோதும் தோடத்துறையை அபிவிருத்தி செய்ய முடியாது. அவர்கள் நல்லவிடயங்களுக்கு ஒருபோதும் இணங்குவதில்லை என்றார்.

 

Share This