
மனோ கணேசன் பதவி விலக வேண்டும்
“மலையக மக்களுக்கு நில உரிமையை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்றால் எம்.பி. பதவியை துறந்துவிட்டு வீட்டுக்கு செல்லுங்கள்.”
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு சவால் விடுத்துள்ளார் உரிமை மீட்போம் தலைமுறை காப்போம் அமைப்பின் தலைவர் பா. சிவநேசன்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“ நிலத்தை வாங்கி கொடுக்க முடியவில்லை என்றால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுவிட்டு வீட்டுக்கு போகவேண்டும் மனோ கணேசன்.
மலையகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் இடம் கொடுக்கவில்லை என்றால் வட கிழக்குக்கு போக சொல்வது மனோகனேசனின் கையாலாகாத தன்மையை காட்டுகின்றது .
மலையகத்தில் எத்தனையோ ஏக்கர் கணக்கில் இடங்கள் உள்ளது .
அதை அரசாங்கத்திடம் கேட்டு பெற்றுகொடுக்க முடியாத நீங்கள் (உங்கள் மொழியில்) தற்குறி மாதிரி அறிக்கை விட வேண்டாம் .
வடகிழக்கு இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்படாத பிரதேசமா ?
மலையக மக்கள் வடகிழக்குக்கு சென்று அங்கு அனர்த்தம் ஏற்பட்டால் அவர்களை நீங்க எமலோகத்துக்கு போக சொல்வீர்கள் போல …
மலையக மக்களை வைத்து நீங்கள் ஆடிய ; நாடகம் போதும் சாமி.
மலையகத்தில் இருக்கின்ற நாங்கள் எப்படி இடத்தை பெறவேண்டும் என்பதை நாங்கள் பார்த்துகொள்கின்றோம்
உங்களுக்காக 14 ஆயிரம் வாக்களித்த கொழும்பு மக்களை தயவு செய்து கவனியுங்கள்.
மலையக மக்களை வைத்து அரசியல் செய்ய முனையவேண்டாம் அமைதியாக கொழும்பை சுத்தம் செய்யுங்கள்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
