அரசியல் தொடர்புகளுக்காக மாற்றப்படும் மன்னார் காற்றாலை கேள்வி மனுக் கோரல்?

அரசியல் தொடர்புகளுக்காக மாற்றப்படும் மன்னார் காற்றாலை கேள்வி மனுக் கோரல்?

மன்னாரில் நிர்மாணிக்கப்படவுள்ள 50 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்திற்கான கேள்வி மனுக் கோரலை (Tender) வழங்க தகுதியுள்ள நிறுவனத்திற்கு வழங்குவதற்குப் பதிலாக, அரசியல் தொடர்புகளின் அடிப்படையில் மற்றொரு பிரபலமான நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பிரபலமான நிறுவனம், ஏராளமான குறைபாடுகள் காரணமாக ஆரம்ப இணக்க சோதனையில் நிராகரிக்கப்பட்டது என்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டிற்குக் கூட உட்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மின் உற்பத்தி நிலைய திட்டத்திற்கான கேள்வி மனுக் கோரல்களை (Tender)  ஐந்து நிறுவனங்கள் சமர்ப்பித்திருந்த நிலையில் அவற்றில் இரண்டு நிறுவனங்கள் முதல் சுற்றில் நிராகரிக்கப்பட்டன.

தற்போது கேள்வி மனுக் கோரல் (Tender) வழங்கப்படவுள்ள நிறுவனம், அந்த இரண்டு நிராகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This