அர்செனலை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி வெற்றி

அர்செனலை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி வெற்றி

கராபோ கிண்ண இறுதிப் போட்டியில் அர்செனலை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி வெற்றிபெற்றுள்ளது.

வெம்ப்ளி மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், மான்செஸ்டர் சிட்டி  அணி இரண்டு கோல்கள் அடித்து வெற்றி பெற்றுள்ளது.

மான்செஸ்டர் சிட்டி அணியின் இளம் வீரர் நிக்கோ ஓ’ரெய்லி இரண்டு கோல்கள் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருந்தார்.

ஆட்த்தின் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை, ஆனால் இரண்டாம் பாதியில் மான்செஸ்டர் சிட்டி ஆதிக்கம் செலுத்தியது. ஓ’ரெய்லி 60வது மற்றும் 64வது நிமிடங்களில் கோல் அடித்தார்.

சிறப்பான ஆட்டத்திறனில் இருந்த அர்செனலை, மான்செஸ்டர் சிட்டி தந்திரமான நகர்வுகள் மூலம் ஒரு தீர்க்கமான போட்டியில் தோற்கடித்தது.

ஆட்டம் முழுவதும் கடுமையாகப் போராடிய போதிலும், கோல் அடிப்பதில் ஏற்பட்ட தவறுகளால் ஆர்செனல் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இந்தப் பருவம் முழுவதும் இதுவரை அணியைச் சிறப்பாக வழிநடத்தி வரும் மான்செஸ்டர் சிட்டி அணியின்  தலைவர்  பெர்னார்டோ சில்வா, இந்த வெற்றிஅனைவருக்கும் ஒரு சிறப்பான தருணம் என்று விவரித்தார்.

அணியில் உள்ள அனைவருக்கும் இது மிகுந்த பெருமைக்குரிய தருணம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த பருவத்தில் சிறப்பாக விளையாடி வரும் அர்செனலை வீழ்த்தி வெற்றி பெற்றது மிகவும் சிறப்பானது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )